வழைக்காய் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மேலும், அதில் விட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை அடங்கியுள்ளன. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து, மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழைக்காய் அதிக நார்சத்து மற்றும் ஸ்டார்ச் கொண்டுள்ளதால், குடல்களை சுத்தப்படுத்தி, அதன் செயலை அதிகப்படுத்துகிறது.இதிலுள்ள பொட்டாசியம் உங்களது சிறுநீரகத்துக்கு பல்வேறு நன்மைகளை தருகிறது.