பிரதமர் சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டம் பற்றி தெரியுமா?

68பார்த்தது
பிரதமர் சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டம் பற்றி தெரியுமா?
மின்சார சிக்கனம் மற்றும் மின் கட்டண சிக்கனத்திற்கு மக்களை ஆயத்தப்படுத்தும் வகையில், மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பிஎம் சூர்யாகர் இலவச மின்சாரத் திட்டம் என்பது நமது லாபத்தை இரட்டிப்பாக்கும். இந்த திட்டத்தின் மூலம், வீட்டின் மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிடும்.

இத்திட்டத்தின் கீழ், வீட்டு மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்துவதற்கு, அரசு ரூ.75,000 மானியம்
வழங்குகிறது. உங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பயன்படுத்துவதோடு, மீதமுள்ள மின்சாரத்தை அரசாங்கத்திற்கு விற்கவும் வழிவகை செய்கிறது. இதன் மூலம் மின்சாரக் கட்டணம் நாம் செலுத்த தேவையிருக்காது. உங்களுக்கும் வருமானம் கிடைக்கும். இது பற்றி கூடுதல் விவரங்களை அறிய https://pmsuryaghar.org.in/ என்ற இணையதளத்தை பாருங்கள்.

தொடர்புடைய செய்தி