புதிதாக வாங்கும் செருப்பு அல்லது கட் ஷூ எதுவாக இருந்தாலும் முதலில் மெழுகுவத்தியை அதன் மீது தடவிகொள்ளுங்கள். மெழுகுவத்தியை ஐந்து நிமிடங்கள் ஏற்றிவைத்து பிறகு அதை அணைத்து மெழுகுவத்தியை செருப்பின் ஓரங்களில் குறிப்பாக கால்கள் நுழையும் பகுதி விரல்கள் இருக்கும் பகுதிக்குள் நன்றாக தேயுங்கள். செருப்பை அணிவதற்கு அரைமணி நேரம் முன்பு இப்படி செய்து பிறகு அணிந்தால் அவை கால்களிலும் விரல்களிலும் அழுத்தமாக படியாது, கடிக்கவும் செய்யாது.