திமுக - மதிமுக நாளை 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை

77பார்த்தது
திமுக - மதிமுக நாளை 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை
2024 மக்களவை தேர்தலையொட்டி திமுக கூட்டணி தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. சிபிஐ, சிபிஎம், கொமதேக, ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கனவே தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக, விசிக, மமக, தவாக, மநீம, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - மதிமுக இடையே நாளை (திங்கள்கிழமை) 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. மதிமுக தங்கள் கட்சிக்கான தனிச் சின்னத்தில் (பம்பரம்) போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் 3 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி