திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி இவரது மனைவி நல்லம்மாள் இவர்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர் பொன்னுச்சாமி சுந்தர் ஜீப் வைத்து கான்கிரீட் இரண்டு கலவை மிஷின் அதற்குத் தேவையான உபகரணங்கள் கொண்டு கான்கிரீட் தொழில் செய்து வந்ததாகவும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விபத்தில் பொன்னுச்சாமி இறந்ததாகவும் அவர் சொந்தமாக வைத்திருந்த ஜிப்பு மற்றும் கலவை இயந்திரங்கள் அனைத்தையும் பொன்னுச்சாமியின் சகோதரர் முனுசாமி மற்றும் வேலைக்கு வந்த வேல்மையில் என்ற பெண்ணும் அபகரித்துக் கொண்டதாகவும் தொடர்ந்து வடமதுரை காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்தும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் யாரும் நடவடிக்கை எடுக்காததால் பொன்னுச்சாமியின் மனைவி நல்லம்மாள் தனது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் மேலும் அவர் கூறும் பொழுது காவல்துறை அதிகாரிகள் அனைவரும் எனது கணவரின் சகோதரருக்கு ஆதரவாக உள்ளனர் எங்களுக்கு தற்போது வரை எந்த ஆதாரமும் இல்லை எனது கணவரின் ஜிப்பு உள்ளிட்ட கலவை இயந்திரங்கள் அனைத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.