வேடசந்தூர்: அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு எம்எல்ஏ

71பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா பாளையம் கரிக்காலி பிரிவில் அரசினர் பயிற்சி மையத்தை வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தொடங்கி வைத்தார். இங்கு வேடசந்தூர் தொகுதி முழுவதும் உள்ள பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து ஒரு கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் பாளையம் பேரூராட்சி புதிய கட்டிடத்திற்கு புதன்கிழமை மதியம் 12 மணிக்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்தி ராஜன், குஜிலியம்பாறை ஒன்றிய பெருந்தலைவர் சீனிவாசன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சசி ராஜலிங்கம், பாளையம் பேரூராட்சி தலைவர் பழனிச்சாமி, பாளையம் பேரூர் செயலாளர் கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், பேரூராட்சி துணைத் தலைவர் லதா, அனைத்து பேரூராட்சி கவுன்சிலர்கள், எரியோடு பேரூர் செயலாளர் சின்னா என்ற செந்தில்குமார், மாவட்ட நிர்வாகிகள் பொன்சுப்பு, பிரகாஷ், ராஜமாணிக்கம், சுமதி, பாலசுப்பிரமணி, மோகன்ராஜ், ஒன்றிய அவைத்தலைவர் சம்பத், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி