மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முட்டம் கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டதற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் மாவட்ட எஸ்.பி. தொடர் பேச்சுவார்த்தை நடத்தியபின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதோடு, உடலை வாங்கவும் உறவினர்கள் சம்மதித்தனர்.