கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தில், 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நேரில் சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 15 மற்றும் 16 வயதுள்ள 4 சிறுவர்கள், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனடியாக அவர்களை பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.