கோவை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு 7 விழுக்காடு வாக்குகள் இறங்கியுள்ளது. 2026 தேர்தலில் 20 விழுக்காடு வாக்குகள் கீழே வரும். அதிமுகவில் இருந்து அமைச்சர்களை திமுக இறக்குமதி செய்கிறது. 35 அமைச்சர்களில் 13 பேர் அதிமுகவில் இருந்து வந்தவர்கள். ஆகையால், டப்பிங் எங்களுக்கு தேவையில்லை. அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்தவர்கள் தான் முதலமைச்சருக்கு டப்பிங் செய்துகொண்டிருக்கின்றனர்” என்றார்.