திண்டுக்கல்: சாலையில் பாறைகற்கள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு

70பார்த்தது
திண்டுக்கல்: சாலையில் பாறைகற்கள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை பகுதியில் கடந்த சில நாட்களாகவே மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானல் மலை பகுதி முழுவதிலும் இன்று காலை முதலே சாரல் மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்து வந்தது. தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. மேலும் மழை தொடர்ந்து நீடித்து வந்ததால் கொடைக்கானலில் இருந்து அடுக்கம் பெரிய குளம் செல்லும் சாலை பகுதி முழுவதிலும் தண்ணீர் பெருக்கெடுத்து சாலை ஓரங்களில் உள்ள பாறை கற்கள் உருண்டு சாலை முழுவதும் பரவி காணப்பட்டது.

இதனால் அடுக்கம் பகுதியில் இருந்து பெரியகுளம் செல்லும் வாகனங்களும் அப்பகுதியில் இருந்து கொடைக்கானல் வரும் வாகனங்களும் செல்ல முடியாமல் இருந்தது. மேலும் அப்பகுதியில் சாலை ஓரங்களில் சில இடங்களில் மண் சரிவு ஏற்படும் அபாயமும் நிலவி உள்ளது. எனவே அடுக்கம் பெரியகுளம் செல்லும் சாலையை ஆய்வு மேற்கொண்டு மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி