திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட சுக்காம்பட்டி வளவி செட்டிபட்டியை சேர்ந்தவர் காமல மைதீன் இவரது மனைவி லதா இவர்களுக்கு சொந்தமாக இதே பகுதியில் வீடு உள்ளது. அந்த வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும் வீட்டின் அருகிலேயே இடமும் உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இதே பகுதியைச் சேர்ந்த மேகநாதன் என்பவர் தொடர்ந்து வீட்டின் அருகில் உள்ள நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது நிலத்தில் மேகநாதன் வீடு கட்ட முயற்சி செய்தபோது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருவரையும் விசாரணை செய்ததில் மேகநாதன் நீதிமன்றம் செல்வதாக கூறியுள்ளதாகவும் இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இடத்தை அபகரிக்கும் நோக்குடன் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களை அழைத்து வந்து வீடு கட்டும் முயற்சியில் ஈடுபட்டார். எங்களது நிலத்தில் ஏன் மீண்டும் வீடு கட்ட முயற்சி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு அடியார்கள் மூலம் எங்களை தாக்கிவிட்டார். மேலும் எங்களது செல்போன் மற்றும் பணத்தையும் பறித்து விட்டார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மன்னனை கேனுடன் தீக்குளிக்க வந்த போது பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விட்டனர்.