இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்புகள் ஆய்வு

566பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2121 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18, 77, 414 வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யவுள்ளனர். வாக்குச்சாவடிகளில் பணிபுரிய மொத்தம் 10, 473 அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்ற தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தேவையான அலுவலர்களைவிட 20 சதவீதம் கூடுதலாக அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, இருப்பு அலுவலர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு 24. 03. 2024 அன்றும் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு 07. 04. 2024 அன்றும் நடைபெற்றது. வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு இன்று(13. 04. 2024) நடைபெறுகிறது.
பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல், வாக்குப்பதிவு நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள், அஞ்சல் வாக்குச்சீட்டு உட்பட அனைத்து விதமான படிவங்களை பூர்த்தி செய்வதற்கான பயிற்சிகள் என அனைத்து வகையான பயிற்சிகளும் மாதிரி வாக்குச்சாவடி அமைத்தும், பயிற்சி கையேடுகள் வழங்கி உரிய பயிற்சிகள் ஒலிஒளி அமைப்புடன் அளிக்கப்படுகின்றன.

வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள அலுவலர்கள் அஞ்சல் ஓட்டு பதிவு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி