அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது

76பார்த்தது
அம்பேத்கரின் தேவை முன்னெப்போதையும் விட கூடுதலாக உள்ளது
அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அம்பேத்கரை நினைவு கூர்ந்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பரந்துபட்ட இந்திய சமுதாயம் விடுதலை பெற்ற கையோடு மதத்தாலும் சாதிச் சழக்காலும் மூச்சுமுட்டிக் கிடந்தபோது தெளிவிக்க வந்த தென்றல், மறுபடி சாதிப் பேச்சுகள் தொடங்கியிருக்கும் இந்நேரத்தில் அவரது தேவை முன்னெப்போதையும்விட கூடுதலாக உள்ளது. அவர்தம் பிறந்த நாளான இன்று அவருடைய சிந்தனையை மறுபடி கையிலெடுப்போம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி