தமிழிசை Zoom மீட்டிங்கில் ஆபாச படம்

42822பார்த்தது
தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக இருக்கும் தமிழிசை, Zoom மீட்டிங்கில் இன்று (ஏப்ரல் 14) பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவரது மீட்டிங்கில் சிலர் ஆபாச வீடியோக்களை பரப்பி இருக்கின்றனர். இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் தமிழிசை, “விஷமிகள் சிலர் Zoom மீட்டிங்கில் ஆபாச படங்களை பரவ விட்டு நான் மக்களோடு பேசுவதை தடுத்து விட்டார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். எதிரிகள் என்ன சதி செய்தாலும் நீங்கள் தாமரைக்கு ஓட்டு போட மறவாதீர்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி