திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த ஆா். கோம்பை ஊராட்சிக்குள்பட்ட ஆா்கே. தாதனூா் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில், செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 10 குழந்தைகள் கல்விப் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளி வளாகத்தில், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டி அறை உள்ளது. தற்போது இந்தக் கட்டடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், பள்ளி மாணவா்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுதத்தல் இருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனா்.