அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

75பார்த்தது
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, வாக்குச்சாவடிகள் சீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி, தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில், 01. 01. 2025ம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள், வாக்குச்சாவடி மையங்கள் சீரமைப்பு பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான விண்ணப்பங்கள் 29. 10. 2024 வரை பெறப்படும். அதன்பின்னர் 29. 10. 2024 முதல் 28. 11. 2024 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 06. 01. 2025 அன்று வெளியிடப்படும், என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தேர்தல் வட்டாட்சியர் முத்துராமன், அனைத்து வட்டாட்சியர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி