பங்குனிஉத்திரதிருவிழாமூன்று நாட்கள் கட்டணம் இல்லாத தரிசனம்

76பார்த்தது
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ஆம் தேதி திரு ஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வருகிறது முக்கிய நிகழ்வான வருகின்ற ஆறாம் நாளான பத்தாம் தேதி முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வடிவமும் அதனை தொடர்ந்து வெள்ளி தேரோட்டம் நடைபெறுகிறது பதினொன்றாம் தேதி ஏழாம் திருவிழா மாநகர அன்று மாலை 4: 30 மணிக்கு திரு தேரோட்டம் நடைபெறுகிறது இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தீர்த்த காவடிகளை எடுத்து வந்து பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர் இந்நிலையில் இன்று தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தைப்பூச திருவிழாவை போலவும் பங்குனி உத்திர திருவிழாவிற்கு தரிசன கட்டணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுப்பினர். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி கேள்விக்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நடைபெற்று வரும் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைத்து விதமான கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி