பழனி: அடையாளங்களில் ஒன்று பஞ்சாமிர்தகடை இடம் மாற்றம்

1077பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். பழனி என்றதும் உலகெங்கும் வாழ்பவர்களுக்கு நினைவில் வருவது பழனி மலையும், பஞ்சாமிர்தமும் தான். அதன் பிறகு பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதற்காக மலையடி வாரத்தில் உள்ள சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் தான் அனைவரின் நினைவில் வரக்கூடியது.

நூறு ஆண்டுகளைக் கடந்து மூன்று தலைமுறையாக மலை அடிவாரத்தில் படி ஏறும் இடத்தில் பஞ்சாமிர்தக் கடையை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பழனி கிரிவலப் பாதையில் உள்ள கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஏராளமான கடைகள் அகற்றப்பட்டன நூற்றாண்டு பலமையான சித்தநாதன் பஞ்சாமிர்த கடையும் இந்த தீர்ப்பால் அகற்றப்பட்டது. சித்தநாதன் பஞ்சாமிர்த கடை அகற்றப்பட்டு அருகிலுள்ள இடத்தில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பழனியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பஞ்சாமிர்த கடை அகற்றப்பட்டதால் உள்ளூர் வாசிகள் மட்டுமின்றி முருக பக்தர்கள் பலரும் வருத்தம் அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி