கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

56பார்த்தது
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
திண்டுக்கல் மாவட்டம்
பழனி கால்நடை மருத்துவமனையில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று துவங்கப்பட்டது. பழனி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் சுரேஷ் முகாமை துவக்கி வைத்தார். பசுக்கள், மாடுகள், எருது மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. விவசாயிகள் கால்நடைகளை அழைத்து வந்து மாடுகளுக்கு தடுப்பூசி போட்டு அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி