ஒட்டன்சத்திரம்: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

50பார்த்தது
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை சார்பில் ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெற்ற மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணி வாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2023-2024-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான மணிமேகலை விருது பெற்ற திண்டுக்கல் மாநகராட்சி மவுன்ஸ்பரம் கூட்டமைப்பு மற்றும் குஜிலியம்பாறை கோட்டா நத்தம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஆகியற்றிக்கு தலா ரூ. 1. 00 இலட்சம், வடமதுரை பிலாத்து கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ. 50, 000, வேடசந்துார் நாகம்பட்டி செல்வவிநாயகர் மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் நத்தம் குடகிப்பட்டி பௌர்ணமி மகளிர் சுயஉதவிக்குழு ஆகியற்றிற்கு தலா ரூ. 25, 000 பரிசுத் தொகைகளை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ. 29. 52 இலட்சம் மதிப்பீட்டில் 29 பயனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வழங்கினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி