நெடுந்துார ஓட்டப்போட்டி; 500 பேர் பங்கேற்பு

60பார்த்தது
நெடுந்துார ஓட்டப்போட்டி; 500 பேர் பங்கேற்பு
திண்டுக்கல்லில் நடந்த அண்ணா நெடுந்துார ஓட்டப்போட்டியில் 500 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடற்தகுதியை பேணுவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா நெடுந்துார ஓட்டம் போட்டி திண்டுக்கல்லில் நடந்தது.

எஸ். பி. , பாஸ்கரன் துவக்கி வைத்தார். பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், அரசு பணியாளர்கள், விளையாட்டு ஆர்வலர்கள, 25வயதிற்கு மேற்பட்டோர் என 512 பேர் கலந்து கொண்டனர். இப்போட்டி ஆண், பெண் என இரு பிரிவுகளில் நடத்தப்பட்டது. பெண்கள் பிரிவுக்கான போட்டி கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் துவங்கி, போஸ்ட் ஆபீஸ், ஆர்த்தி தியேட்டர் ரோடு, ஆர். எம். காலனி, எம். வி. எம் பெண்கள் கல்லுாரி, அஞ்சலி ரவுண்டானா, கலெக்டர் அலுவலகம் வழியேமாவட்ட விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. ஆண்கள் பிரிவு போட்டி முகாம் அலுவலகத்தில் துவங்கி பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம், அரசு தலைமை மருத்துவமனை, வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கம் சென்றது.

17 முதல் 25 வயது பிரிவில் எம். எஸ். பி பள்ளி மாணவர் முகேந்திரன் முதலிடம், மாணவிகள் பிரிவில் கள்ளிமந்தயம் பி. எம். எஸ். மெட்ரிக் பள்ளி மாணவி காவியாஸ்ரீ முதலிடம், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் ஜி. டி. என். கல்லுாரி பணியாளர் பொன்னுவெள்ளை முதலிடம், பெண்கள் பிரிவில் புனித அந்தோனியார் கல்லுாரி பணியாளர் பியோ மேரி தெரசா முதலிடம் பெற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி