ஆயுள் தண்டனை கைதி, உயிரிழப்பு

1073பார்த்தது
ஆயுள் தண்டனை கைதி, உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் அரசமரத்து தெருவை சோ்ந்த வீராசாமி மகன் முத்துசாமி (48). கொலை வழக்கில் இவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு கடலூா் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா். இந்த நிலையில், முத்துசாமிக்கு வெள்ளிக்கிழமை இரவு மயக்கம் ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவா் கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடலூா் மத்திய சிறை அலுவலா் பெ. ரவி அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி