கொடைக்கானல்: ஏரியில் 6 டன் மதுபாட்டில்கள் அகற்றம்

60பார்த்தது
கொடைக்கானல் நகருக்கு அடையாளமாக விளங்கி வருவது நட்சத்திர ஏரியாகும் 3 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரி கடந்த 1863-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. இந்த ஏரி சுதந்திரத்துக்கு பிறகு ஏரியின் உரிமை 1950-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மீன் வளத்துறைக்கு வழங்கப்பட்டது.

ஏரியை தூய்மையாக வைத்திருக்கும் முயற்சியாக நகராட்சி சார்பில் 50 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் கடந்த 2 மாதங்களில் 6 டன் அளவுக்கு காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் காலி மதுபாட்டில்கள் ஏரியில் கிடக்கும் என்று நம்புகிறோம். அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி