தவெகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு விஜய்யின் உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசாக வழங்கியுள்ளார். தவெகவில் தற்போது 19 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களை கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார். அவர்களிடம் பேசிய விஜய், "உங்களை நம்பி அரசியலுக்கு வந்துள்ளேன். அடுத்த 10 மாதங்களுக்கு நாம் அனைவரும் மிக கடுமையாக உழைக்க வேண்டும். நம்முடைய இலக்கு ஒன்றே ஒன்று தான், அது 2026, அந்த இலக்கில் உறுதியாக வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.