அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்.ஐ.ஆர். கசியவிட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதைத்தொடர்ந்து, சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின் கருத்துகளை நீக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு ஜன,27ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.