நம்முடைய வேண்டுதல்களையும், ஆசைகளையும் நிறைவேற்றும் சக்தி சங்கு பூவிற்கு உண்டு. ஈசனுக்கும், விஷ்ணுவிற்கும் பிடித்த பூவாக இது இருக்கிறது. சிவன், விஷ்ணு, கிருஷ்ணர், சனீஸ்வரர் பகவான் ஆகிய நால்வரும் இந்த பூவில் வாசம் செய்வதாக ஐதீகம். இதை வடகிழக்கு திசையில் வளர்த்து வந்தால் பணரீதியான தடைகள் இருக்காது. வீட்டில் அடிக்கடி சுப நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த பூவை கொண்டு செவ்வாய்க்கிழமைகளில் மகாலக்ஷ்மிக்கு அர்ச்சனை செய்தால் அனைத்து ஐஸ்வர்யங்களும் வந்து சேரும்.