வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம்

72பார்த்தது
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

புதன்கிழமை காலை 9. 30 மணி அளவில் கிடைத்த தகவலின் படி அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 16 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான நேற்று முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து இன்று மாலை 4. 30 மணிக்கு தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் பழனிக்கு பாதயாத்திரையாக காவிரி நீர் எடுத்து கிரிவலப் பாதையில் ஆடிபாடி வருகின்றனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் பாதயாத்திரயாக பால்குடம் எடுத்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தான நிர்வாகம் மலைக் கோயிலுக்கு சென்று வர யானை பாதை வழியாக மலைக் கோவிலுக்கு செல்லவும் , படிப்பாதை வழியாகவும் கீழே இறங்க ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதனை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வருகின்ற 25 ம் தேதி கொடியிறக்கத்துடன் வைகாசி விசாக திருவிழா நிறைவடைகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி