தென்மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

594பார்த்தது
தென்மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மே 24ஆம் தேதி காலைக்குள் வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மத்திய வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. பின்னர் வடகிழக்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடையும். இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் கன மழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி