பழங்குடியின பெண்ணை தாக்கிய நபர்கள் மீது புகார் மனு

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை வாழகிரி மல்லிகா நகரில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடியின மக்கள் பல வருடமாக வாழ்ந்து வருகின்றனர் இப்பகுதியைச் சேர்ந்த மல்லிகா மற்றும் அவரது கணவர் ரமேஷ் ஆகியோர் இதே பகுதியில் உள்ள உதயசூரியன் என்பவர் எஸ்டேட்டில் வாஜ்பாயனாக வேலை பார்த்து வருகின்றனர் இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பிரபு மற்றும் வெங்கடேஷ் மற்றும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் தோட்டத்திற்குள் வந்து அங்கு தங்கி உள்ள மல்லிகா மற்றும் ரமேஷிடம் அங்கிருந்து வெளியேறுமாறும் இங்கு ஒட்டப்பட்டுள்ள போஸ்டரை தொடர்ந்து நீங்கள் தான் சுவற்றில் ஒட்டியுள்ள போஸ்டரை கிழித்து வருகிறீர்கள் என்று கூறி ஆபாசமாக பேசியும் தாக்கியும் உள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கினர் மேலும் அவர்கள் கூறும் பொழுது தாண்டிக்குடி காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்தும் 10 நாட்களாகி தற்போது வரை ஆய்வாளர் சத்யா எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அடி வாங்கிய எங்கள் மீது நடவடிக்கை எடுத்து தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் பண்ணைக்காடு அரசு மருத்துவமனை மற்றும் தேனி கானா விளக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளேன். ஆகவே தாண்டிக்குடி காவல்துறை ஆய்வாளர் மீதும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு வழங்கினோம் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி