திடீரென வெடித்து சிதறிய செல்போன்

7003பார்த்தது
திடீரென வெடித்து சிதறிய செல்போன்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இளந்தாரியூரை சேர்ந்தவர் சந்துரு (வயது27). இவரது வீட்டிற்கு நேற்று உறவினர்களான உடுமலைப்பேட்டை அருகில் உள்ள உருதுமலைப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (57), திருப்பூர் மாவட்டம் தண்டிக்காரப் பாளையத்தை சேர்ந்த வேலுச்சாமி (66) ஆகியோர் வந்திருந்தனர்.

வீட்டு விஷேசம் தொடர்பாக அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சந்துருவின் செல்போன் சார்ஜ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. அருகில் அமர்ந்திருந்த 3 பேர் மீதும் தெறித்து தீப்பொறி பரவியது. இதனால் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி