திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் உலக மக்கள் நலன் மற்றும் மழை வேண்டியும், ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் சிறப்பாக வளரவும், இயற்கை பேரிடர்கள் நடக்காமல் இருக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியைச் சேர்ந்த அஷ்ட லட்சுமிநாத பெருமாள் சுவாமிகள் (வயது 90) இப்பகுதியில் வந்து திங்கள்கிழமை இரவு ஆவணி அமாவாசையை முன்னிட்டு அக்னி யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார். இதில் தலையில் தீச்சட்டி சுமந்து செவ்வாய்க்கிழமை காலை 7 மணிவரை சுமார் 12 மணி நேரம் அக்னி யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தார்
இவர் ராமர் பக்தியுடைய சைவ சுவாமிகள் என்றும், அக்னி மாமுனிவர் தவத்தால் இவர்களுடைய பாட்டன், முப்பாட்டன்கள் பிறந்ததாகவும் இவரது வம்சம் அக்னி வம்சம் என்பதால் தீ எங்களை சுடாது என்றும் கூறுகிறார்.
உலக நாடுகள் மழையில்லை என்றாலும், குற்றங்கள் ஏற்பட்டால், விவசாயிகள் பாதிக்கப்பட்டால் இந்த அக்னி யாகம் செய்வதால் பகவானுக்கு அனுக்கிரகம் தெரிந்து நல்ல மழை பெய்யும் உயிரினங்கள் நன்கு வளர்ந்து விளங்கும் என்றும் இதற்காக இந்த அக்னி சிறப்பு யாகம் செய்வதாக கூறினார். இந்த யாகத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அக்னி யாகத்தால் இப்பகுதியில் நல்ல மழை பெய்யும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.