தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மாநில ஆணையர்

1106பார்த்தது
வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திங்கட்கிழமை இரவு 6. 30 மணியளவில் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, முத்தழகுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உடன் இருந்தனர். அப்பொழுது பீட்டர் அல்போன்ஸ் வாக்காளர்களிடம் பேசியதாவது:

பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின சிறுபான்மையின இனத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து அவர்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடுமை நடைபெற்றது. பெண்களையும் சிறுபான்மையினரையும் மிகவும் கொடுமைப்படுத்தும் அரசு தான் நடைபெற்று வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு நள்ளிரவில் 1000, 500 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பிழப்பு செய்தார். பாஜக அரசு 75 இலட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக சிஐஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி