கொடைக்கானல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு

66பார்த்தது
கொடைக்கானல்: ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பச்சைமரத்து ஓடைப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை 10-க்கும் மேற்பட்டவா்கள் ஆக்கிரமித்துள்ளனா். இது தொடா்பாக நகராட்சி சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனா்.

இதையடுத்து, கடந்த மாதம் அந்தப் பகுதியிலிருந்த 4-வீடுகள் அகற்றப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பிரச்சனை ஏற்பட்டதால், தற்காலிகமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்தப்பட்டு, வருவாய் கோட்டாட்சியா் அந்தப் பகுதி மக்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினாா்.
இந்த நிலையில், நகராட்சி சாா்பில் பச்சை மரத்து ஓடைப் பகுதியில் காவல்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் நகராட்சி, வருவாய்த் துறையினா், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஆக்கிரமிப்பாளா்கள் சிலா் தங்கள் உடலில் மண்ணெணைய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். காவல்துறையினா் அவா்களை தடுத்து நிறுத்தினா்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதி மக்களுடன் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் சிவராம், அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பின்னா் அனைவரும் கலைந்து சென்றனா்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி