திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தால் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-22-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி 2024-2025-ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு 30. 07. 2024 செவ்வாய்க்கிழமை அன்றும், முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 31. 07. 2024 புதன்கிழமை அன்றும் திண்டுக்கல், அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக உரிய வழிமுறைகளை பின்பற்றி பள்ளி மாணவர்களுக்கு காலை 10. 00 மணி முதலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2. 00 மணி முதலும் நடைபெறவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி, அவர்கள் தெரிவித்துள்ளார்.