அயோத்திக்கு இரண்டாம் கட்டமாக திண்டுக்கல் பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக 2-ம் கட்டமாக 227 பக்தர்கள் புறப்பட்டனர். அயோத்தி ராமரை தரிசிப்பதற்காக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பாக 2-ம் கட்டமாக இன்று 227 பக்தர்கள் திண்டுக்கல்லில் இருந்து பேருந்து மூலமாக திருப்பூர் சென்று திருப்பூரில் இருந்து ரயில் மூலமாக அயோத்தி செல்கின்றனர்.
இதற்கான வழி அனுப்பும் நிகழ்வு திண்டுக்கல் பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: அயோத்தி ராமரை தரிசிப்பதால் பக்தர்களுக்கு புண்ணியம் உண்டாகும். ஏராளமான பக்தர்கள் செல்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். அவர்களை வழிபட்டு வணங்கி வழி அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.