ஆத்துார்: “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” ஆட்சியர் ஆய்வு

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வருவாய் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, ஆத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஆத்தூர் வட்டம், சீவல்சரகு ஊராட்சி ஆதிலட்சுமிபுரத்தில் அங்கன்வாடி மையம், எஸ். பாறைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். 

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளிடம் பாடங்கள் தொடர்பாக விளக்கங்கள் கேட்டு, மாணவ, மாணவிகளின் கற்றல் அடைவு மற்றும் வாசிப்புத் திறன் குறித்தும், இடைநின்ற மாணவ, மாணவிகள் எவரேனும் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கற்றல் - கற்பித்தல் உபகரணங்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாணவ, மாணவிகளிடம் காலை உணவு மற்றும் மதிய உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சணாமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் தனி எழுத்தர்(கல்வி) சரவணக்குமார் மற்றும் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி