திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டு அதிகளவில் நடந்தது. இது தொடர்பாக வத்தலக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் மாடசாமி (44) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 8 டூவீலர்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் 4 டூவீலர்கள் வத்தலக்குண்டு பகுதியிலும், மற்ற 4 டூவீலர்கள் மற்ற மாவட்டங்களில் திருடப்பட்டதும் தெரிய வந்தது.