உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம்

71பார்த்தது
உலக மலேரியா தின விழிப்புணர்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார மருத்துவ அலுவலர் அசோக் குமார் அஞ்சுகுளிப் பட்டியில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் தேவி ராஜா சீனிவாசன், சிலுவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மருத்துவர் திலீப் குமார், வி. எஸ் கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு டாக்டர் பிரபாகர், புனித வளனார் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு வின்சென்ட் கமலக்கண்ணன், அனுக்கிரகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்திற்கு அருட் தந்தை ஐசக் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் மலேரியா நோயின் தாக்கம் குறித்தும், அது பரவும் முறை, பரிசோதனை, சிகிச்சைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுநர் வைரவ ரத்தினம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேகர், மருத்துவ மல்லா மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் நல்லேந்திரன், முனியப்பன், சிவக்குமார், திருப்பதி, அஞ்சுகுளிப்பட்டி ஊராட்சி செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் விளக்கிப் பேசினர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் குணசீலன் மற்றும் களஞ்சியம் பகுதி இணையாளர் சசிகலா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி