கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!

83பார்த்தது
கடும் வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரிப்பு!
கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஜனவரி மாதம் தொடங்கப்பட வேண்டிய உப்பு உற்பத்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் தாமதமாக தொடங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்ததால் மீண்டும் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது வெயிலில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதியதாக உற்பத்தி செய்யப்பட்ட உப்பு ஒரு டன் ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையாவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டு சேமித்து வைக்கப்பட்ட உப்பு ரூ.4000 வரை விற்பனை ஆவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி