விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

69பார்த்தது
விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு
திண்டுக்கல் பாரதி விடுதி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது. திண்டுக்கல் கக்கன் நகர் பாரதி விடுதி நடுநிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த தடகளம் கபடி, கோகோ, சிலம்பம், கராத்தே போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம் பரிசு வழங்கினார்.

நடுநிலைப்பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் சண்முகவேல், ஸ்ரீ வாசவி தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் ரவி, மீனாட்சி பவன் நிர்வாக இயக்குனர் கோபு, ராஜாங்கம் பிள்ளை டிரான்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் சந்திரன் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எஸ். கே. சி. , மணி செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி