கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

78பார்த்தது
தமிழர் தேசம் கட்சி சார்பில் மாணவரணி மாநில செயலாளர் நத்தம் பூமி அம்பலம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அம்மனுவில் அவர் தெரிவித்ததாவது திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய 14 கல் குவாரிகளில் உரிய அனுமதியுடன் 6 குவாரிகள் மட்டுமே இயங்குகிறது. மீதமுள்ள குவாரிகள் சான்றிதழ் பெறாமல் இயங்கி வருகிறது.

மேலும் பிள்ளையார் நத்தம் கிராமம் பூதக்குடி கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரிகள் தேவாங்குகள் சரணாலய பகுதிக்குள் இருப்பதால் அங்கு வாழக்கூடிய வனவிலங்குகள் மற்றும் அரிய வகை உயிரினமான தேவாங்குகள் என பல உயிரினங்கள் அதிக ஒளியாலும் வெடி வைக்கும் பொழுது வீசும் கற்களாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகிறது. எனவே அனுமதியின்றி செயல்படக்கூடிய வாரிகள் மீது நடவடிக்கை எடுத்து வனவிலங்குகளை அழித்து வரும் கல்குவாரிகள் உரிமத்தை ரத்து செய்ய கோரி மனுவில் தெரிவித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி