திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் கவரயபட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகன் தங்கவேலு (வயது 35). இவர் நத்தம் கோமணாம்பட்டி அருகே குறிஞ்சி நகரில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகே சாத்தம்பாடி செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தில் அமர்ந்து செல் போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பாலத்தின் அருகே இருந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து நத்தம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.