நத்தம் மீனாட்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

4008பார்த்தது
நத்தம் மீனாட்சிபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. இதையொட்டி கடந்த மாதம் 31ந் தேதி காலை சந்தன கருப்பு சுவாமி கோயிலிலிருந்து தீர்த்தம் அழைத்தல் வருதல் நிகழ்சியும் அன்றிரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5 ந்தேதி தோரண மரம் ஊன்றுதல் நிகழ்ச்சி நடந்தது. 7ந் தேதியன்று இரவு அம்மன் குளத்திலிருந்து கரகம் பாவித்து அம்மன் அழைத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து அம்மனுக்கு அரண்மனை பொங்கல், மாவிளக்கு, வாணவேடிக்கைகள் நடந்தது. நேற்று முன் தினம் காலை பக்தர்கள் பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அன்னதானம் நடந்தது. அன்றிரவு ஊர்மா விளக்கு நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை அம்மன் குளத்திலிருந்து பக்தர்கள் சந்தனக்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊர் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து நேற்றிரவு ஊர் சார்பில் பத்தர்கள் முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்தனர்.

பின்னர் இரவு கரகம் அம்மன் குளம் சென்றடைந்தது. இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் காரணக் காரர்கள், விழாக்குழுவினர் மற்றும் நத்தம் மீனாட்சிபுரம் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி