திண்டுக்கல்: வெளி நோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு போராட்டம்

70பார்த்தது
சென்னையில் அரசு மருத்துவமனையில் டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல்லில் அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் வெளி நோயாளிகள் பிரிவை புறக்கணிப்பதாக மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் தெரிவித்தார்.
சென்னையில் அரசு டாக்டர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் சூம் மீட்டிங்கில் நடைபெற்றது.
மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. இதில்
டாக்டர் மீது தாக்குதல் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறது. மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் மற்றும் பி. என். எஸ். குற்றவியல் விதிகளின் கீழ், டாக்டரை கொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கிய குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில்
போலீஸ் அவுட் போஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி