நத்தம் அருகே ஏர் கலப்பை விழுந்து குழந்தை பலி

5995பார்த்தது
நத்தம் அருகே ஏர் கலப்பை விழுந்து குழந்தை பலி
திண்டுக்கல் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள மங்களப்பட்டியை சேர்ந்தவர் சண்முகவடிவேலு (வயது40). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயம் பார்த்து வருகிறார். இவருக்கு போதும்பொண்ணு என்ற மனைவியும், விஜயராஜ் (2), காவ்யா (1) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய்கிழமை தனது வீட்டின் அருகே டிராக்டரில் ஏர் கலப்பையை மாட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரவிதமாக விதமாக ஏர் கலப்பை தவறி கீழே நின்று கொண்டிருந்த அவரது மகள் காவ்யா (1) மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீஸார் சிறுமியின் உடலை மீட்டு நத்தம் அரசு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி