திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூரை சேர்ந்தவர் தினகரன் (வயது 30). இவரும் சேர்வீடு பகுதியை சேர்ந்த மணி (வயது 54) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் நத்தத்திலிருந்து குட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த இன்னோவா கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மணி என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் கோயம்புத்தூரை சேர்ந்த ராஜசேகர் (வயது 23) நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.