திடீரென ஏற்பட்ட தீ விபத்து வீடு எரிந்து முற்றிலும் சேதம்

81பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேத்தூர் அருகே எர்ரம்பட்டியில் முருகேசன் மனைவி இந்திரா என்பவர் மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் மூவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் இந்திரா வேலைக்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டின் அருகே சென்று பார்த்துள்ளனர். அப்போது தீ மள மளவென பற்றி எரிய துவங்கியது. இது குறித்து நத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடியும் தீயை அணைக்க முடியவில்லை. இறுதியில் வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்து சாம்பலாகியது. இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் தீ பற்றி எரிந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you