திண்டுக்கல் பகுதியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக, இதை ஒருமைப்பாட்டு விழாவாக ஒருங்கிணைத்து நண்பர்கள் குழு தலைமையில் தொடர்ந்து எட்டாம் ஆண்டாக சிறப்பாக ஏற்பாடு செய்து சுமார் 15000 க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. ஜாதி மத பாகுபாடின்றி சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த கந்தூரி விழா நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு மக்களும் ஜாதி மத பகுபாடின்றி ஓர் தாய் மக்களாக உணவு பெற்று சென்றனர். இந்தக் கந்தூரி விழாவில் பேகம்பூர், ஜின்னா நகர், பூச்சி நாயக்கன்பட்டி அதனைச் சுற்றியுள்ள பொதுமக்கள் உணவை பெற்று சென்றனர்.