திண்டுக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

69பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 274 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இன்றையதினம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நலவாரிய திட்டத்தின் கீழ், நிலக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 5 பயனாளிகளுக்கு இலவச தேய்ப்பு பெட்டிகள் தலா ரூ. 6, 000 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி ரூ. 9, 500 மதிப்பீட்டிலும் என ஆக மொத்தம் 6 பயனாளிகளுக்கு ரூ. 39, 500 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஸ்பாபு, பழனி வருவாய் கோட்டாட்சியர் கிஷன்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரிசுவி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி