
திண்டுக்கல்: புதிதாக மாறும் ரயில் நிலையம்
திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் கொடைக்கானலில் இருந்து கார் மூலம் வருகை தந்தார். பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகள் மற்றும் லிப்ட் வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து புதிதாக ரூ 30 கோடி செலவில் நடைபெற்று வரும் கட்டிடப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில்: - திண்டுக்கல் ரயில் நிலையம் விரிவாக்கப் பணிகள் தற்போழுது துரிதமாக நடைபெற்று வருகிறது. "திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ரூ 30 கோடி செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் ஆகியவை புதிதாக அமைக்கப்பட உள்ளது. மேலும், பயணிகள் தங்கக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட ஓய்வறைகள், உணவு அருந்தும் கூடம், புதிதாக பார்க்கிங் ஏரியா ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பயணிகளின் வருகை அதிகமாக இருப்பதால் இதுபோன்ற வசதிகள் செய்யப்படுகிறது" என தெரிவித்தார். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு சென்னை கிளம்பிச் சென்றார்.